பயிற்சியின் போது வெடித்த ஏவுகணையின் பாகம்

09 November 2025

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் மாவட்டத்தில் இன்று பொக்ரான் துப்பாக்கி சுடும் தளத்தில் பாதுகாப்பு பயிற்சி நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஏவுகணை ஒன்று ஏவப்பட்டது. இந்த நிலையில் அந்த ஏவுகணை இலக்கை விட்டு விலகி பதறியா என்ற கிராமத்தில் இருந்து 500 கிலோமீட்டர் தொலைவில் கீழே விழுந்தது. இதனால் பயங்கர சத்தம் ஏற்பட்டது. இந்த சத்தத்தின் காரணமாக பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்தனர். மேலும் இதனால் எந்த விதமான உயிர் சேதம் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து அங்கு சென்று அதிகாரிகள் ஏவுகணையின் பகுதியை மீட்டு துப்பாக்கி சூடும் தளத்திற்கு கொண்டு வந்தனர்.