லாரி மீது வேன் மோதி 15 பேர் உயிரிழப்பு

02 November 2025

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் ஹலோடி பகுதியைச் சேர்ந்த 20 பேர் இன்று வேனில் இந்து மத வழிபாட்டு தளத்திற்கு சென்று விட்டு பின்னர் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது மடோடா பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது வேன் மோதியதில் வேனில் சென்ற 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் மூன்று பேர் படுகாயம் அடைந்து அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உடனடியாக அங்கு வந்த காவல் துறையினர் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.