ராஜபாளையத்தில் டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி ஒரு நாள் கடையடைப்பு !
23 September 2025
ராஜபாளையம் அம்பலப்புளிபஜாரில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்றக்கோரி
ஒரு நாள் கடையடைப்பு இன்று 23.09.2025 செவ்வாய்க்கிழமை காலை 6.00 மணிமுதல் மாலை 6.00 மணிவரை நடைபெற்று வருகிறது இந்தப் பகுதியில் டாஸ்மாக் இருப்பதால் வியாபாரம் பாதிப்பு , பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகின்றன மற்றும் அருகில் பல பிரபலமான கோவில்கள் உள்ளதால் பக்தர்கள் , பெண்கள் குழந்தைகள் அவதிப்படுகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ராஜபாளையம் செய்தியாளர் N.மோகன் குமார்