உளுந்தூர்பேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தால், பு. மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் தண்ணீர் தேங்குவது வழக்கம். இந்த தேங்கிய நீர் போக்குவரத்துக்கு இடையூறாகவும், சுகாதாரச் சீர்கேட்டையும் ஏற்படுத்தி வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் தரப்பிலிருந்து தொடர்ந்து புகார்கள் வந்துகொண்டிருந்தன. இந்த நிலையில், உளுந்தூர்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர், AJ. மணிகண்ணன், நெடுஞ்சாலைத் துறை மற்றும் வட்டார வளர்ச்சித் துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று, பு. மாம்பாக்கம் ரயில்வே மேம்பாலத்தில் தேங்கியுள்ள தண்ணீரை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின்போது, தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றுவதற்கான மாற்று வழிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசிக்கப்பட்டது. மேலும், இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மேம்பாலத்தின் வடிகால் அமைப்பை மேம்படுத்தவும், மழைநீர் சீராக வடிந்து செல்ல நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு AJ. மணிகண்ணன் அறிவுறுத்தினார். உடன் வந்த அதிகாரிகள், சட்டமன்ற உறுப்பினரின் அறிவுறுத்தலின் பேரில், தேங்கியுள்ள நீரை உடனடியாக வெளியேற்ற உத்தரவிட்டார்.