விழுப்புரம் சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை

24 November 2025

விழுப்புரம் சுற்றியுள்ள பகுதியில் தொடர் மழை

கடந்த ஒரு வார காலமாக விழுப்புரம் மாவட்டத்தில் பரவலாக விட்டுவிட்டு மழை பெய்து வருகிறது. அதை தொடர்ந்து குளிர்ந்த காற்று வீசி வருகிறது.

நேற்று காலையிலிருந்து வானம் மேக மூடத்துடன் காணப்பட்டது. இந்நிலையில் தற்போது விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், சிந்தாமணி சாலை, அகரம் உள்ளிட்ட பகுதியில் மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

செய்தியாளர்.
ஆ.ஆகாஷ், விழுப்புரம்