மழைக்காலங்களில் நம் உடலை எவ்வாறு பாதுகாக்கலாம்

10 December 2025

மழைக்காலங்களில் நாம் நம் உடலை பாதுகாத்துக் கொள்வது முக்கியமான ஒன்றாகும். 

அவற்றில் ஒரு சில குறிப்புகள் இங்கே வழங்கப்பட்டுள்ளன. 

மழைக்காலங்களில் கொதிக்க வைத்த குடிநீர் அல்லது சுத்திகரிக்கப்பட்ட நீரை அருந்துவது மிகவும் நல்லது.. மேலும் அவ்வப்போது துளசி இஞ்சி மஞ்சள் கலந்த மூலிகை தேநீர் உள்ளிட்டவற்றைப் பருகலாம் 

மேலும் நன்கு சுத்தம் செய்யப்பட்டு சமைக்கப்பட்ட உணவை உண்ணுவது ஆகச் சிறந்தது. 

இதேபோன்று மழைக்காலங்களில் கொசு உற்பத்தியும் அதிகமாக இருக்கும் எனவே கொசுக்களிடமிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள தூங்கும் போது கொசுவலைகளை பயன்படுத்துவது மிகவும் நல்லது. குறிப்பாக மழைக்காலங்களில் வீட்டின் அருகே தேங்கி இருக்கும் நீரை அவ்வப்போது அப்புறப்படுத்துவது கொசு உற்பத்தியை தடுக்கும். 

அடிக்கடி கைகளை கழுவுவதால் நம் கைகளில் ஏற்பட்டு இருக்கும் கிருமி தொற்றுகள் நீங்கும். 

மழைக்காலங்களில் குறிப்பாக மழை பெய்யும் நேரங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கலாம். ஏனெனில் இவற்றால் நாம் மழை நீரில் நனைந்து நமக்கு சளி காய்ச்சல் இருமல் போன்ற உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

மழைக்காலங்களில் முக்கியமாக பரவும் நோய்கள் டெங்கு, மலேரியா சிக்கன் குனியா ஆகிய நோய்கள் தான். எனவே இந்த நோய்கள் குறித்த எந்த அறிகுறி இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது...