மழைக்காலங்களில் சாப்பிட வேண்டிய உணவுகள் என்ன???

01 December 2025

மழைக்காலங்களில் நமக்கு ஏற்படும் நோய்களிலிருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள எந்த மாதிரி உணவுகள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று உங்களுக்கு தெரியுமா? 

பொதுவாக மழைக்காலங்களில் நமக்கு நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் தேவை உள்ளதாக இருக்கின்றது. அந்த வகையில் மழைக்காலங்களில் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்துவதற்கு தேவையான பருவ கால காய்கறிகள், பாதாம், மிளகு சேர்த்த உணவுகள் உள்ளிட்ட உணவுகளை நாம் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக குடலுக்கு ஆரோக்கியத்தை அளிக்கும் உணவுகளை நாம் எடுத்துக் கொள்ள வேண்டும். 

ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்று பார்த்தோமேயானால் பாதாம், பருவகால பழங்கள், மற்றும் காய்கறிகள் பருப்பு வகைகளை சேர்த்துக் கொள்ளலாம். மேலும் நாம் உண்ணும் உணவில் நிச்சயமாக மிளகு மற்றும் மிளகு பொடியை சேர்த்து சமைப்பது நல்லது. 


இவை எல்லாவற்றையும் தாண்டி நாம் வெதுவெதுப்பான தண்ணீரை எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது.