கனமழை காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

21 October 2025

தமிழகத்தில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் நாளை கன மழை பெய்ய கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாளை மூன்று மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி புதுச்சேரியிலும் நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.