தமிழ்நாட்டில் 7 மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கனமழை எச்சரிக்கை!
13 June 2025
வரும் ஒரு வாரத்திற்கு மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் கன மழை, அதிக கன மழை பெய்யும் வாய்ப்புள்ளதால் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களுக்கு கனமழை எச்சரிக்கையினை பேரிடர் மேலாண்மை துறை அறிவித்துள்ளது. மேலும் அந்த அறிவிப்பில் மழை நேரங்களில் எப்போதும் கடைபிடித்து வரும் நிலையான வழிகாட்டு முறைகளை செயல்படுத்துவதற்கு தயாராக மேற்கண்ட ஏழு மாவட்டங்களின் ஆட்சித் தலைவர்கள் தயார் நிலையில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே போர்க் கால அடிப்படையில் கனமழை விழும் பகுதி என குறிப்பிடப்பட்ட மாவட்டங்களில் உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்கள் தற்போதே தயாராகி விட்டார்கள் என்று கூறப்படுகிறது.