வளிமண்டலத்தின் கீழடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வரும் நிலையில் தெற்கு மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் குற்றால அருவிகளுக்கு வரும் தண்ணீரின் அளவானது அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக பாதுகாப்பு கருதி குற்றாலம் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் பொதுமக்கள் குளிக்க தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே சுற்றுலாப் பயணிகள் அதற்கேற்றவாறு தங்களது பயணத்தை திட்டமிட அறிவுறுத்தப்பட்டுள்ளது.