தண்ணீரில் தத்தளிக்கும் செஞ்சி நகரம்
23 October 2025
தண்ணீரில் தத்தளிக்கும் செஞ்சி நகரம்
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி காந்தி பஜார் சாலையில் கனமழை காரணமாக முழங்கால் அளவிற்கு நீர் தேங்கியுள்ளது.
இங்குள்ள கடைகளிலும் மழை நீர் புகுந்ததால் உரிமையாளர்கள் வேதனையடைந்து வருகின்றனர்.
மேலும் சாலைகளில் மழை நீருடன் கழிவு நீரும் கலந்து உள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
-செய்தியாளர்
ஆ.ஆகாஷ், விழுப்புரம்