26 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் ரயில்வே கட்டணம் உயர்வு

21 December 2025

நாடு முழுவதும் ரயில் கட்டணம் வருகின்ற 26 ஆம் தேதி முதல் உயர்த்தப்பட உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த நிலையில் சாதாரண வகுப்புகளில் 215 கிலோ மீட்டருக்கு மேல் கிலோமீட்டருக்கு ஒரு பைசா அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று 500 கிலோ மீட்டர் வரையிலான ரயில்களில் ₹ 10 மட்டுமே கட்டணம் உயர்த்தப்படுகிறது. 

மேலும் இந்த ரயில்வே கட்டண உயர்வு மூலம் அரசுக்கு 600 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கும் எனவும் தெற்கு ரயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கூடுதல் ரயில் டிக்கெட் கட்டணம் வருகின்ற டிசம்பர் 26 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளது. 

அதுமட்டுமின்றி புறநகர் ரயில் சேவைகளில் கட்டணம் உயர்த்தப்படவில்லை எனவும் ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது...