தூர்வாரப்படாத ஏரி.. பொதுமக்கள் கோரிக்கை ..!

25 November 2025

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை வட்டம், கூ.கள்ளக்குறிச்சி கிராமத்தில் உள்ள ஏரி நீண்ட காலமாகத் தூர்வாரப்படாமல் உள்ளதால், தற்போது பெய்துவரும் கனமழையால் ஏரிக்கு வரும் தண்ணீர் முழுவதும் தேங்காமல் வழிந்தோடி, அருகிலுள்ள கெடிலம் ஆற்றில் கலக்கிறது. இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர வழியின்றி, அப்பகுதியில் உள்ள கால்நடைகள் தண்ணீரின்றித் தவித்து வருகின்றன. மேலும், பறவைகளும் குடிநீரின்றித் தவித்து வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கொற்றவைச் செய்தியாளர், ஆ.ஐயப்பன்