எம்.பி. பப்பு யாதவ் கைது: ராகுல் காந்தி கண்டனம்

07 February 2026

பிகார் மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி உயிரிழந்த நீட் பயிற்சி மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டுப் போராடி வந்த சுயேச்சை எம்.பி. ராஜேஷ் ரஞ்சன் (பப்பு யாதவ்), 1995-ஆம் ஆண்டு தொடரப்பட்ட பழைய வழக்கு ஒன்றில் ஆஜராகவில்லை என்ற காரணத்திற்காகக் கைது செய்யப்பட்டு இரண்டு நாள் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.


மாணவியின் மரணத்தில் அரசின் மெத்தனப்போக்கை விமர்சித்து வந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கைக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது அரசியல் ரீதியிலான பழிவாங்கும் நடவடிக்கை என்றும், அரசாங்கத்திடம் பொறுப்புக்கூறல் கோரும் குரல்களை ஒடுக்கும் முயற்சி என்றும் அவர் சாடியுள்ளார். பப்பு யாதவ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜாமீன் மனு பிப்ரவரி 9-ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.