குடும்ப மக்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தை பாஜக குறி வைக்கிறது: ராகுல் காந்தி

16 December 2025

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்மான ராகுல் காந்தி இன்று தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்...

அந்தப் பதிவில் பிரதமர் மோடிக்கு இரண்டு விஷயங்கள் மீது ஆழமான வெறுப்புள்ளது. மகாத்மா காந்தியின் கொள்கைகள் மற்றும் ஏழைகளின் உரிமைகள். மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் மகாத்மா காந்தி முன்வைத்த கிராம சுயராஜ்யம் என்ற தொலைநோக்கு பார்வையின் உயிர் போன வெளிப்பாடாக திகழ்கிறது. கோடிக்கணக்கான கிராமப்புற மக்களுக்கு இது ஒரு வாழ்வாதாரமாக இருந்து வருகிறது. ஆனால் தற்போது வந்துள்ள புதிய மசோதா காந்தியின் லட்சியங்களுக்கு நேரடியான அவமதிப்பாகும் என தெரிவித்துள்ளார். 

மேலும் இந்தியாவில் பரவலான வேலையின்மையால் இளைஞர்களின் எதிர்காலத்தை ஏற்கனவே பாதித்துள்ள மோடி அரசு தற்போது ஏழை கிராமப்புற குடும்ப மக்களின் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையே குறி வைக்கிறது எனவும் தெரிவித்துள்ளார்...