பீகார் மாநிலம் அவுரங்காபாத்தில் இன்று காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தி கலந்துகொண்டு பேசினார். அப்போது பேசிய அவர் இளைஞர்கள் கல்வி சுகாதாரம் வேலைவாய்ப்பு தொடர்பான பிரச்சனைகளுக்கு தனது அரசை கேள்வி கேட்கக்கூடாது என்பதற்காக பிரதமர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து இளைஞர்களை திசை திருப்ப முயற்சி செய்கிறார் என தெரிவித்தார். மேலும் தேசிய ஜனநாயக கூட்டணி முதலமைச்சர் நிதிஷ்குமார் 20 ஆண்டுகளில் இளைஞர்களை தொழிலாளர்களாக மாற்றி உள்ளதாக தெரிவித்த ராகுல் காந்தி வினாத்தாள் கசிவு பீகாரில் சாதாரணமாக இருக்கிறது இது நிதி ரீதியாக பணக்கார மாணவர்களுக்கு பயனளிக்கிறது என தெரிவித்தார்.