ராகுல் காந்தி தேசவிரோத சக்திகளின் ஊதுகுழலாக மாறிவிட்டார்: அனுராக் தாகூர் கடும் விமர்சனம்

24 February 2026

மத்திய முன்னாள் அமைச்சரும் பாஜக மூத்த தலைவருமான அனுராக் தாகூர், காங்கிரஸ் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்துள்ளார். ராகுல் காந்தி வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் இந்தியாவைப் பற்றிய எதிர்மறையான பிம்பத்தை உருவாக்கி வருவதாகவும், தற்போது அவர் தேசவிரோத சக்திகளின் ஊதுகுழலாகச் செயல்பட்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தியாவின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு எதிராகச் செயல்படும் சக்திகளுக்கு ராகுல் காந்தி ஆதரவாகப் பேசி வருவதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், ராகுல் காந்தியின் இத்தகைய செயல்பாடுகள் நாட்டின் ஒற்றுமைக்கு ஊறுவிளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் அனுராக் தாகூர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.