மிகவும் பிரசித்தி பெற்ற திருப்பதி இரண்டு ஏழுமலையான் கோவிலில் நேற்று புஷ்ப யாகம் பிரம்மாண்டமாக நடைபெற்றது. ஆண்டுதோறும் பிரம்மோற்சவ விழாவிற்கு பிறகு இந்த நிகழ்ச்சி நடைபெறும். அந்த வகையில் நேற்று முன்தினம் நடைபெற்ற இந்த புஷ்ப யாகத்தின் முதல் பணியாக நேற்று முன் தினம் மாலை வசந்த மண்டபத்தில் அங்குரார்ப்பணம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து பூக்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பூக்கள் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டுவரப்பட்டன. பின்னர் நேற்று பிற்பகல் 2 மணிக்கு புஷ்ப யாகம் தொடங்கி 5 மணி வரை பிரம்மாண்டமாக புஷ்ப யாகம் நடைபெற்றது. இந்த புஷ்ப யாகத்தில் கோவில் நிர்வாகிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.