புனேவில் லாரிகள் மற்றும் கார் மோதி கோர விபத்து

13 November 2025

மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள நவாலை பகுதியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் இன்று இரண்டு லாரிகள் மற்றும் கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரண்டு லாரிகளுக்கு நடுவே கார் சிக்கிக் கொண்டது. மேலும் விபத்து ஏற்பட்ட சிறிது நேரத்திலேயே லாரி தீப்பிடித்து எறிய தொடங்கியது . இந்த கோர விபத்தில் லாரி மற்றும் காரில் இருந்த எட்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் மேலும் இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் நீண்ட நேரம் போக்குவரத்து பாதிப்பை ஏற்பட்டது. தகவல் அறிந்த மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் தேவேந்திரபட்னாவிஸ் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.