மாவனல்லா பகுதியில் மாடு மேய்க்க சென்ற பெண்ணை அடித்துக் கொன்ற புலி. தலையில்லாத உடலைக்கண்டு ஊர்மக்கள் அதிர்ச்சி.

25 November 2025

நீலகிரி மாவட்டம் மசனகுடி நகராட்சிக்கு உட்பட்ட மாவனல்லா பகுதியை சேர்ந்தவர் பாலன்
இவருடைய மனைவி நாகியம்மாள் (வயது.69) இவர் 24.ம் தேதி காலை தன் வளர்ப்பு கால்நடைகளான ஆடு மாடுகளை மேய்ச்சலுக்காக தனது வீட்டின் சற்றுத்தொலைவில் உள்ள ஆற்று ஓரப்பகுதிக்கு கூட்டிச் சென்றார் மதியம் 1;30.மணியளவில் அங்குள்ள புதரில் பதுங்கியிருந்த பெண் புலி ஒன்று அவரைத் தாக்கி கவ்வி இழுத்துச் சென்றுள்ளது. இதை அதேபகுதியைச் சேர்ந்த ஒருவர் பார்த்து பதட்டம் அடைந்து ஊருக்குள்  ஓடிச்சென்று தான் பார்த்த காட்சியை கூறியுள்ளார் இதைக்கேட்டு பதறிப்போன ஊர் மக்கள் சம்பவ இடத்திற்கு ஓடிச் சென்று பார்த்துள்ளனர். மக்கள் கூட்டமாக வருவதைப் பார்த்த பெண் புலி நாகியம்மாளின் உடலை விட்டு விட்டு ஓடியுள்ளது.

புதரில் சென்று பார்த்த மக்கள் நாகியம்மாள் தலை துண்டிக்கப் பட்டநிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து வனத்துறையினர் மற்றும் போலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த அதிகாரிகள் நாகியம்மாளின் உடலை மீட்டு அங்கிருந்து கொண்டு செல்ல முயன்றபோது அவர்களை ஊர் மக்கள் தடுத்து புலியை உடனடியாக பிடிக்க வேண்டும் எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலூர் போலிஸ் துணை சூப்பிரண்டு வசந்த குமார் மற்றும் அதிகாரிகள் ஊர் மக்களிடம் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அதில் முதல்கட்டமாக கேமராக்கள் பொருத்தப்பட்டு புலி நடமாட்டம் குறித்து கண்காணித்து தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர்.

அதைத் தொடர்ந்து ஊர்மக்கள் போராட்டத்தை கைவிட்டனர் மேலும் அந்தப் பகுதிகளில் வனத்துறையினர் கேமராக்களை பொருத்தி கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர் இந்த சம்பவம் குறித்து மசினகுடி போலிசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மா.ஜாபர் அலி திருப்பூர் செய்தியாளர்.