குமரியில் கும்பப்பூ நடவு பணிகள் தொடக்கம்
03 November 2025
குமரி மாவட்டத்தில் கும்பபூ நடவு பணிகள் துவங்கியுள்ளது. கடுக்கரை, காட்டுப்புதூர், திடல், சீதப்பால், ஆண்டித்தோப்பு, செண்பகராமன் புதூர், லாயம், கோதைகிராமம், தெங்கம்புதூர், புத்தளம், ஒழுகினசேரி, ராஜாவூர் பகுதிகளில் கும்பப்பூ சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. வடகிழக்குபருவமழை குறைந்துள்ளதால் விவசாயிகள் தீவிரமாக விவசாய பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 6000 ஹெக்டரில் கும்பப்பூ சாகுபடி நடக்கிறது.