Breaking News

18 November 2025

வாணியம்பாடி அருகே கள்ளக் காதல் விவகாரம் தட்டிக் கேட்ட கணவனை வீடு புகுந்து மனைவி மற்றும் பிள்ளைகள் கண் முன்னே வெட்டி தலைமறைவான இளைஞர் கைது.
வாணியம்பாடி, நவ்.17- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ், இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரு குழந்தைகள் உள்ள நிலையில், ஜீவா திருமணத்தை மீறி பிரேம்குமார் என்ற வாலிபருடன் உறவில் இருந்து உள்ளார்.
இதனை அறிந்த ஜீவாவின் கணவர் அப்பன் ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது.இதனால் ஜீவா பிரேம்குமார் உடனான உறவை துண்டித்ததாகவும் இதனால் ஆத்திரமடைந்த பிரேம்குமார் கடந்த 13 ஆம் தேதி நள்ளிரவு அப்புன்ராஜ் தனது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது வீட்டின் பின்பக்க சுவர் ஏறி குதித்து உள்ளே சென்ற பிரேம்குமார் அப்புன் ராஜிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பின்னர் மறைத்து வைத்திருந்த கத்தியால் அப்புன் ராஜை சரமாரியாக தாக்கி உள்ளார். இதில் தலை உள்ளிட்ட ஐந்து இடங்களில் வெட்டு காயம் ஏற்பட்டு அப்புன் ராஜ் உயிருக்கு போராடினார்.இவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை அறிந்து பிரேம்குமார் அங்கிருந்து தப்பித்தார். இதனை தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் படுகாயம் அடைந்த அப்புன் ராஜ்ஜை சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேல்  சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற கிராமிய போலீசார் தப்பி ஓடிய பிரேம்குமாரை தேடும் பணியில் ஈடுபட்டனர்.இந்நிலையில் பிரேம்குமார் தமிழக கர்நாடகா மாநில எல்லையான பாகலூர் பகுதியில் கட்டிட வேலையில் ஈடுபட்டு வருவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று அவரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணைக்கு பின்னர் நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.