குமரி:குளச்சல் அருகே 2 வாகனங்களில் கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த 2500 கிலோ அரிசி பறிமுதல்

12 November 2025

குமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில், குளச்சல் அருகே இன்று 12-ம் தேதி அதிகாலை ரோந்து பணியின் போது, கேரளா பதிவெண் கொண்ட சொகுசு காரில் கேரளாவுக்கு கடத்தப்படவிருந்த சுமார் 2000 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.மேலும், குளச்சல் வாட்டர் டாங்க் அருகில் மற்றொரு காரில் 500 கிலோ அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட அரிசி கோணம் அரசு நுகர் பொருள் வாணிப கழக கிடங்கிலும், கடத்தல் வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டன.