பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பில்லங்குளம் ஊராட்சி அய்யனார்பாளையம் கிராமம் குடிநீர் பைப் அமைத்து தருவதற்கு கோரிக்கை.

22 November 2025

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் பில்லங்குளம் ஊராட்சி அய்யனார்பாளையம் கிராமம் அய்யனார் பாளையத்திற்கு வீட்டுக்கு வீடு குடிநீர் பைப் அமைத்து தருவதற்கு அரசு நிதி ஒதுக்கியும் இன்னும் அய்யனார் பாளையத்திற்கு பைப் லைன் இன்னும் அமைக்கவில்லை குடிநீர் பிரச்சனை அய்யனார்பாளையத்தில் இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் பள்ளம் தோண்டி தண்ணீர் எடுக்கிறார்கள் இன்னும் ஒரு குடிநீர் தொட்டி அமைத்தும் வீட்டுக்கு வீடு பைப் லைன் அமைத்து தரவேண்டும் என்று அய்யனார்பாளையம் ஊர் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்தியாளர்: NRP.ராமசாமி.