கன்னியாகுமரி மாவட்டம் ஆரோக்கியபுரத்தில் புதிய நியாய விலைக்கடை திறப்பு.
08 December 2025
குமரி மாவட்டம் லீபுரம் ஊராட்சிக்குள்பட்ட ஆரோக்கியபுரத்தில் புதிய நியாய விலைக்கடை திறப்பு விழா நடைபெற்றது.
ஆரோக்கியபுரம் மீனவ மக்களின் கோரிக்கையை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ. 15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நியாய விலைக்கடை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு என்.தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். ஆரோக்கியபுரம் பங்குத்தந்தை கிங்ஸ்லி கலந்து கொண்டு புதிய நியாயவிலைக் கடையை திறந்து வைத்தார்.
லீபுரம் ஊராட்சி அதிமுக பொறுப்பாளர் லீன் வரவேற்று பேசினார். அகஸ்தீசுவரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலர் எஸ்.ஜெஸீம், வட்டார வளர்ச்சி அலுவலர் நீலபாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் நீலபெருமாள், மீன்வளத்துறை உதவி இயக்குநர் தீபா, மாவட்ட அதிமுக இளைஞர் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்து கொண்டனர். லீபுரம் ஊராட்சி முன்னாள் தலைவர் ஜெயகுமாரி நன்றி கூறினார்.