கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் ₹2.42 லட்சம் வர்த்தகம்!
கள்ளக்குறிச்சி, டிசம்பர் 2: கள்ளக்குறிச்சி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஏலத்தில், மக்காச்சோளம், எள், ஆமணக்கு மற்றும் உளுந்து உள்ளிட்ட விளைபொருட்கள் மொத்தம் ₹2,42,599-க்கு விற்பனை செய்யப்பட்டன.இன்றைய ஏலத்திற்கு, விவசாயிகள் 100 மூட்டை மக்காச்சோளம், 8 மூட்டை எள், 3 மூட்டை ஆமணக்கு, ஒரு மூட்டை உளுந்து என மொத்தம் 112 மூட்டை விளைபொருட்களைக் கொண்டு வந்திருந்தனர்.விலை நிலவரத்தின்படி, ஒரு மூட்டை மக்காச்சோளம் சராசரியாக ₹1,740-க்கும், எள் ஒரு மூட்டை ₹5,805-க்கும், ஆமணக்கு ஒரு மூட்டை ₹6,150-க்கும், உளுந்து ஒரு மூட்டை ₹3,700-க்கும் கொள்முதல் செய்யப்பட்டன. மொத்தமாக, மார்க்கெட் கமிட்டியில் ₹2,42,599 மதிப்பிலான வர்த்தகம் நடைபெற்றது.
கொற்றவை செய்தியாளர்
அய்யப்பன்