குமரி: மணக்குடி அருகே கடலில் தவறி விழுந்த மீனவர்! தேடும் பணி தீவிரம்.....

25 October 2025



கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் கொட்டில்பாட்டை சேர்ந்த மீன்பிடி தொழிலாளி செல்வன் (54) கடந்த வாரம் குளச்சலை சேர்ந்த ஈசாக் என்பவரின் விசைப்படகில் 18 பேருடன் மீன்பிடிக்க சென்றார்.
மீன் பிடித்த பின் இரவு விசைப்படகு குளச்சல் துறைமுகம் நோக்கி வந்து கொண்டிருந்த போது மணக்குடி கடல் பகுதியில் வைத்து படகில் இருந்து செல்வன் தவறி கடலில் விழுந்தார்.சக மீனவர்கள் தேடிய போதுஅவரை கண்டுபிடிக்க முடியவில்லை. குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் மற்றும் மீனவர்களும் படகில் கடலில் விழுந்தவரை தேடி வருகின்றனர்.