கரூர் தாந்தோணி மேற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட செல்வன் நகர் ,சரஸ்வதி நகர்,குஞ்சன் கருப்பண்ணசாமி கோவில் செல்லும் வழியில் ஒரு மாத காலமாக குப்பைக் கழிவுகள் சுத்தம் செய்யப்படவில்லை. தற்பொழுது பெய்த கனமழையால் மழை நீர் குப்பைக் கழிவுகளுடன் சேர்ந்து துர்நாற்றம் வீசுகிறது. பொதுமக்கள் அப்பகுதியில் கடந்த செல்ல முடியாமல் மிகவும் அவதிக்குள்ளாகின்றனர். சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை வைத்தனர்.
செய்தியாளர் -S.சித்ரா சுரேஷ்