கரூரில் வெள்ள அபாய எச்சரிக்கை
23 October 2025
தொடர் கனமழை காரணமாக கர்நாடகா கே ஆர் எஸ் அணையில் இருந்து 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் கரூர் காவேரி கரையோர இருக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் காவேரி ஆற்றில் தண்ணீர் அதிகமாக வந்து கொண்டிருப்பதால் வந்து கொண்டிருப்பதால், ஆற்றில் குளிக்கவும் மீன்பிடிக்கவோ போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என்று ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்
-R.சுரேஷ்