கரூர் இந்திய மருத்துவ சங்கம் நடத்தும் இலவச மருத்துவ பரிசோதனை முகாம் (14/12/2025) ஞாயிற்றுக்கிழமை அன்று காலை 10 மணி முதல் மதியம் 1மணி வரை தாந்தோணிமலையில் உள்ள இந்திரா நர்சரி மற்றும் பிரைமரி ஸ்கூல் பகுதியில் நடைபெறுகிறது. முகாமில் சிறப்பு மருத்துவர்கள் வருகை தருகின்றனர். எனவே பொதுமக்கள் முகாமில் தங்களது உடல் பரிசோதனை செய்து கொள்ளலாம் என கரூர் மருத்துவ சங்கத்தினர் தெரிவித்துக் கொண்டனர்.