கரூர் ஹோஸ்ட் லயன் சங்கம், அன்னை மகளிர் கல்லூரி லியோ சங்கம், புலியூர் செட்டிநாடு டெக் கல்லூரி. லியோ சங்கம், மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து, மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் உதவியுடன் மாபெரும் இலவச கண் சிகிச்சை முகாம் வருகின்ற (07/12/25,) ஞாயிற்றுக்கிழமை காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரை கரூர் வெங்கமேடு ஸ்ரீ செங்குந்தர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. பொதுமக்கள் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது கண்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொண்டனர்.