எரியாத மின் கோபுரம் விளக்குகள் பொதுமக்கள் அச்சம்

27 November 2025

கரூர், ஆட்டையாம்பரப்பு பகுதியில் உள்ள ஹை மாஸ் விளக்கு  ஒரு வார காலமாக எரியவில்லை. இதனால் அப்பகுதியில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. தற்பொழுது மழைக்காலம் என்பதால், சாலையை கடப்பதற்கு இருட்டில் வெளிச்சம் இன்றி பொதுமக்கள் செல்வதற்கு மிகுந்த அச்சம் அடைகின்றனர். சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் உடனடியாக மின்விளக்குகளை சரி செய்து தர வேண்டி அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.R. சுரேஷ், கரூர்