கரூர் மாவட்டம் ஆட்டையாம்பரப்பு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பேருந்து நிலையத்தின் அருகே இரவு நேரங்களில் கனரக வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் விபத்து ஏற்பட வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் சாலையிலே லாரி ஓட்டுநர்கள் சிறுநீர் கழிப்பதால் பொதுமக்கள் மூக்கை பிடித்துக் கொண்டு இருக்க வேண்டிய அவல நிலை ஏற்படுகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக நெடுஞ்சாலைத் துறையினர் இரவு நேரங்களில் இருக்கும் கனரக வாகனங்களை அப்புறப்படுத்தி உதவ வேண்டும் என்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கேட்டுக் கொண்டனர்.