ஆட்டையாம்பரப்பு பகுதியில் அதிகாலையில் விபத்து

26 November 2025

கரூர் ஆட்டையாம்பரப்பு பகுதியில் இன்று (நவ.26) அதிகாலை கார் ஒன்று டூவீலரை மோதி விபத்துக்குள்ளாக்கியது. இதில் டூவீலரில் பயணம் செய்த இருவரும் பலத்த காயமடைந்து சாலையில் விழுந்தனர். தகவல் கிடைத்ததும் நெடுஞ்சாலை காவல்துறையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டு, தனியார் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பினர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
R. சுரேஷ்