ஆட்டையாம்பரப்பில் கொட்டி தீர்த்த கனமழை

21 November 2025

கரூர் மாவட்டம், அப்பிபாளையம் கிராமத்துக்கு உட்பட்ட ஆட்டையாம்பரப்பு ஊரில் இன்று(21/11/25) மாலை 5 மணி அளவில் மிக கனத்த மழை பெய்தது. காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், மாலையில் பெய்த கனத்த மழையால் சாலைகளில் மழை நீர் இருபுறங்களிலும் வழிந்து ஓடியது. பள்ளி மாணவர்கள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு சென்றனர். வாகன ஓட்டிகள் அருகில் உள்ள கடைகளில் தஞ்சம்  அடைந்தனர்.