வெண்ணைமலை அருகே தீக்குளிக்க முயற்சி

20 November 2025

கரூர், வெண்ணைமலை அருகே அறநிலையத்துறையில் நிலம் கையகப்படுத்தப்படும்  முயற்சியை தொடர்ந்து அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு ஆதரவாக உடன் போராட்டத்தின் தீவிரமாக இன்று அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் தீக்குளிப்பு  முயற்சியில்  ஈடுபட்டனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து எந்தவித அசம்பாவிதம் ஏற்படாதவாறு பாதுகாத்தனர். தீக்குளிக்க முயன்றவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.