வெங்கமேடு -வெண்ணைமலை செல்லும் மூன்று பிரிவு சாலை அருகே அப்பகுதியில் சாலை ஓரத்தில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசுகிறது. இந்த குப்பைகளில் இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுவதால் தெருநாய் தொல்லை அதிகமாக காணப்படுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல மிகுந்த அச்சமடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகத்தினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டி வாகன ஓட்டிகள் கேட்டுக் கொண்டனர்.