வையாபுரி நகர் E.Bஆபிஸ் பின்புறம் உள்ள சாலையில் பாதாள சாக்கடை சரி செய்ய பள்ளம் தோண்டப்பட்டது. பின்பு பல மாதங்கள் ஆகியும் அந்த பள்ளத்தை சரி செய்யாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால். அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அந்தப் பள்ளத்தில் விழுந்து செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. அந்த பள்ளத்தை சரி செய்ய சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் கேட்டுக் கொண்டனர்.