கன்னியாக்குறிச்சி கிராம செயலக திறப்பு விழா

06 February 2026

கன்னியாகுறிச்சி கிராம செயலகம் திறப்பு விழா


பட்டுக்கோட்டை வட்டம் கன்னியாகுறிச்சி கிராமத்தில்  ஊராட்சி மன்ற கிராம செயலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த அலுவலகத்தில் கிராம நிர்வாக அலுவலகமும் செயல்பட உள்ளது.


ரூ. 42,62,360 மதிப்பீட்டில் சிறப்பாக கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடத்தை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்கள். 


இவ்விழாவில் மதுக்கூர் வட்டார வளர்ச்சி அலுவலக  அலுவலர்கள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் உறுப்பினர்கள்,
ஊராட்சி செயலாளர் மற்றும் பணியாளர்கள், கிராம பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


பட்டுக்கோட்டை செய்தியாளர் பரமேஸ்வரன்.