குமரி: ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
04 November 2025
தேர்தல் வாக்குறுதியின் படி, அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களை அரசு ஊழியராக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்,
பணி ஓய்வு பெறும்போது அங்கன்வாடி ஊழியர்களுக்கு 10 லட்சமும்,உதவியாளர்களுக்கு ஐந்து லட்சமும் பணிக்கொடையாக வழங்க வேண்டும் என்ற நீதிமன்ற தீர்ப்பை உடனடியாக அமல்படுத்த கேட்டும்,மே மாத விடுமுறையை ஒரு மாத காலமாக வழங்கிட வேண்டும், குழந்தைகளின் பாதுகாப்பை அரசு கருத்தில் கொண்டு காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்டச் செயலாளர் அமுதா தலைமையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் மாலை நேர ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் 200க்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர்கள் கலந்து கொண்டு கோஷங்களை எழுப்பினர்*