ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

24 December 2025

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் 


மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மகாத்மா காந்தியின் பெயரை மாற்றியும் இதில் மாநில அரசின் மீது நிதிச் சுமையை ஏற்படுத்தும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தின் ஒரு பகுதியாக


கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக திமுக ஒன்றிய செயலாளர் ராஜவேல் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இதில் திமுக, காங்கிரஸ், விசிக, மதிமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி கண்டன உரையாற்றினர்...


இரா.வெங்கடேசன், சப்எடிட்டர், கொற்றவை நியூஸ்