இந்திய ஜனாதிபதி புத்தாண்டு வாழ்த்து

31 December 2025

உலகம் முழுவதும் நாளை ஆங்கில புத்தாண்டு விமரிசையாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பலதரப்பினரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

எந்த வகையில் இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் புத்தாண்டின் மகிழ்ச்சியான தருணத்தில் இந்தியாவில் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து இந்தியர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். புதிய ஆண்டு புதுப்பிக்கப்பட்ட ஆற்றலையும் நேர்மறையான மாற்றத்தையும் குறிக்கிறது. 

2026 ஆம் ஆண்டு நமது வாழ்வில் அமைதி மகிழ்ச்சி மற்றும் சேமிப்பை கொண்டு வந்து வலுவான மற்றும் வளமான இந்தியாவை உருவாக்க புதிய ஆற்றலை புகுத்தட்டும் என தெரிவித்துள்ளார்..