 
	 
								இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மோ நான்கு நாள் பயணமாக கேரள மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக இன்று டெல்லியில் இருந்து சிறப்பு விமானம் மூலம் மாலை ஆறு முப்பது மணி அளவில் அவர் திருவனந்தபுரம் வந்தடைந்தார். அவருக்கு மாநில ஆளுநர் ராஜேந்திர அருளைக்கர் முதலமைச்சர் பினராய் விஜயன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் கவர்னர் மாளிகைக்கு சென்றடைந்தார். தொடர்ந்து நாளை பம்பைக்குச் செல்லும் குடியரசுத் தலைவர் அங்கு ஐயப்பன் சன்னிதானம் சென்று விட்டு சபரிமலையில் தரிசனம் செய்ய உள்ளார். பின்னர் 23ஆம் தேதி ராஜ்பவன் வளாகத்தில் முன்னாள் ஜனாதிபதி கே ஆர் நாராயணன் சிலையை திறந்து வைக்க உள்ளார்.