மோசமான வானிலை: குடியரசுத் தலைவரின் ஜலந்தர் பயணம் ரத்து

16 January 2026

பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் (NIT) 21-வது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற இருந்தது.


இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்க குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு திட்டமிட்டிருந்தார்.



இருப்பினும், கடந்த சில நாட்களாக பஞ்சாப்பின் பல்வேறு பகுதிகளில் நிலவி வரும் அடர்ந்த மூடுபனி மற்றும் மோசமான வானிலை காரணமாக, பாதுகாப்பு மற்றும் பயணச் சூழல் கருதி குடியரசுத் தலைவரின் இந்த ஜலந்தர் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.



முன்னதாக, நேற்று அமிர்தசரஸில் உள்ள குருநானக் தேவ் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவர் பங்கேற்றார். அதனைத் தொடர்ந்து பஞ்சாப் அரசு அவருக்கு அளித்த இரவு விருந்திலும் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.