நேற்று டெல்லி செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து பின்னர் அந்த கார் வெடித்து சிதறியது மக்களிடையே பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதில் 12 பேர் உயிரிழந்தனர். மேலும் 24 பேர் காயமடைந்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் டெல்லி காவல்துறை உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது இரங்கலை தெரிவித்தனர். இந்நிலையில் ஆசிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி திரௌபதி முர்மு இந்த சம்பவம் குறித்து அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். மேலும் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்களை அவர் தெரிவித்தார்.