ஜனாதிபதி கிறிஸ்துமஸ் வாழ்த்து

24 December 2025

கிறிஸ்துமஸ் பண்டிகை உலகம் முழுவதும் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் பலதரப்பட்ட தலைவர்களும் தங்களது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

இதன் ஒரு பகுதியாக இந்திய பிரதமர் திரௌபதி முர்மு தனது கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் நாட்டு மக்களுக்கு குறிப்பாக கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கு தனது நெஞ்சார்ந்த கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த புனிதமான பண்டிகை அமைதி சமத்துவம் சமாதானம் மற்றும் சேவையின் மதிப்புகளை பறைசாற்றி நம்மை ஊக்கப்படுத்துகிறது. இயேசு கிறிஸ்து நமக்கு காட்டிய பாதைகளை பின்பற்றி அன்பு மற்றும் பரஸ்பர சமாதானம் நிறைந்த ஒரு சமுதாயத்தை கட்டி எழுப்புவதற்காக உழைக்க வேண்டும் என அனைவரும் உறுதி ஏற்பும் என தெரிவிக்கப்பட்டுள்ளது....