ஆப்பிரிக்காவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள ஜனாதிபதி

10 November 2025

இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு ஆப்பிரிக்க நாடுகளுக்கு ஆறு நாட்கள் அரசு முறை சுற்றுப் பயணமாக சென்றுள்ளார். முதலாவதாக அங்கோலாவிற்கு சென்ற ஜனாதிபதிக்கு விமான நிலையத்தில் இராணுவ மரியாதை அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதிபர் மாளிகையில் அந்த நாட்டின் அதிபர் ஜோஜோ மானுவேலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளிடையே ராணுவம் மற்றும் வர்த்தக உறவு குறித்து ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு செல்ல உள்ள ஜனாதிபதி 13 ஆம் தேதி நாடு திரும்புகிறார்...