மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ரவி அசோக் என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு இரண்டு வயது குழந்தையை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த 2015 ஆம் ஆண்டு அவருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
இந்த நிலையில் தனக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனை ரத்து செய்து குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என அவர் இந்திய ஜனாதிபதிக்கு கருணை மனு அனுப்பியுள்ளார்...
அந்த மனுவை இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு இன்று நிராகரித்து உத்தரவிட்டார். மேலும் இதன் காரணமாக அவருக்கு மரண தண்டனை உறுதியாகி உள்ளது. இது வருங்காலத்தில் இது போன்ற குற்றங்களை தடுப்பதற்கு சிறந்த ஒரு முடிவாகும் என பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்...