பெருமைமிக்க தஞ்சை பெரிய கோவில்

17 November 2025

தமிழகத்தில் ஆயிரம் ஆயிரம் கோவில்கள் இருந்தாலும் பல்வேறு சிறப்புகளை பெற்ற கோவில்தான் தஞ்சை பெருவுடையார் கோவில் என்று அழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோவில். இந்த கோவிலின் சிறப்புகள் அனைவருக்கும் அறிந்த போதிலும் இந்த கோவிலின் பல்வேறு வரலாறுகள் தற்போது உள்ள இளைய தலைமுறையினருக்கு தெரியாமலேயே இருக்கிறது. 

தஞ்சை பெருவுடையார் கோவில் ஒரு உலக பாரம்பரிய சின்னம் ஆகும். இந்தியாவில் அமைந்துள்ள மிகப்பெரிய கோவில்களில் தஞ்சை பெருவுடையார் கோவிலிலும் ஒன்றாகும். இந்த கோவில் தமிழர் கட்டிடக்கலைக்கு சான்றாக விளங்கி வருகிறது. இந்த கோவில் 1010 ஆம் ஆண்டு முதலாம் ராஜராஜ சோழனால் கட்டப்பட்டது. இந்த கோவிலின் பணிகள் 1003 ஆம் ஆண்டு தொடங்கியது. பின்னர் பணிகள் 1010 முடிவடைந்தது. 

இந்த கோவிலின் முக்கிய சிறப்பு அம்சங்கள் என்னவென்று பார்த்தோமேயானால் இந்த கோவிலில் விமானத்தின் உயரம் 216 அடி உயரம் ஆகும் 

இந்தக் கோவிலில் உள்ள  சிவலிங்கம் உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம் ஆகும். 6 அடி உயரம் 54 அடி சுற்றளவு கொண்ட ஆவுடையார் மற்றும் 23 அரை அடி உயரம் கொண்ட லிங்கம் என தனித்தனியாக கருங்கற்களால் செதுக்கி இணைக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்த கோவிலின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டுள்ள பிரம்மாண்டமான நந்தி சிலையின் உயரம் 13 அடிகள் மற்றும் அகலம் 16 அடிகள் ஆகும். 

இந்த கோவில் ஏழு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்டது. 


தஞ்சை பெரிய கோவிலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் மத்திய அரசு சார்பில் கடந்த 1954 ஆம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி ஆயிரம் ரூபாய் நோட்டை வெளியிட்டு அதில் தஞ்சை பெரிய கோவில் ஆலயத்தின் தோற்றம் பதிக்கப்பட்டது. இது தமிழகத்தின் பாரம்பரிய கலையை நாடு முழுவதும் கொண்டு சென்றது. 

கோவிலின் கடைசி குடமுழுக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த குடமுழுக்கின் போது ராஜகோபுரம் மற்றும் அனைத்து விமானங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு பிரம்மாண்டமாக நடத்தப்பட்டது. இதில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

தஞ்சை பெரிய கோவிலின் கோபுர நிழல் தரையில் விழாது என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவி வருகிறது. ஆனாலும் இந்த கோவிலின் விமான நிழல் தரையில் விழுகின்ற படியே அமைக்கப்பட்டுள்ளது. 

கோவில் குறித்து இது போன்ற சில தகவல்களும் வெளியாகி வரும் நிலையில் எப்போதும் நமது பாரம்பரியத்தை நிலை நாட்டும் வகையில் தஞ்சை பெருவுடையார் கோயில் விளங்கி வருவது.  நிதர்சனமான உண்மை.  மேலும் ஒவ்வொரு நாளும் இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான மக்கள் வருகை தருகின்றனர். குறிப்பாக இங்கு வரும் வெளிநாட்டினர் இங்குள்ள கட்டிடக்கலைகளை புகைப்படம் பிடித்து உலகம் முழுவதும் தமிழக பாரம்பரியத்தை எடுத்து உரைக்கின்றனர் என்பதில் சந்தேகம் இல்லை....