திண்டுக்கல் ஆத்தூரில் ஒரே இரவில் 22000 வாக்காளர்கள் நீக்கம்

08 December 2025

திண்டுக்கல்:அம்பேத்கரின் 70-வது நினைவு தினத்தையொட்டி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்த அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இந்த விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் கருத்து தெரிவிக்காதது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெக-வில் இணைந்தது குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும். அவர் அனைத்து கட்சிகளிலும் இருந்தார். நான் ஒரே ஒரு கட்சியில் இருக்கிறேன்.
எனது ஆத்தூர் தொகுதியில் ஒரே இரவில் ‘ஆப்சென்ட்’ எனக்கூறி 6,000 பேர், இறந்தவர்கள் எனக்கூறி 16,000 பேர் என மொத்தம் 22,000 பேரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கியுள்ளனர். இது தொடர்பாக தேர்தல் ஆணையத்துக்கு புகார் அனுப்பியுள்ளேன் என்று கூறினார். 


த. பிரபாகரன். 
நிருபர். 
திண்டுக்கல்.